ஹெச். ராஜா,எஸ்.வி. சேகர் ரெண்டுபேரும் சரியான சைபர் சைக்கோக்கள்!அமைச்சர் ஜெயக்குமார்
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்,பா.ஜ.க. தேசியச் செயலாளர் ஹெச். ராஜாவும், எஸ்.வி. சேகரும் சைபர் சைக்கோக்கள் என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அவரிடம், ஹெச்.ராஜா, எஸ்.வி. சேகர் ஆகியோர் மீது புகார் அளித்தால் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் ஹெச்.ராஜா பெண்களையும், எஸ்.வி.சேகர் பெண் பத்திரிகையாளர்களையும் இழிவுபடுத்தி பேசியிருப்பதற்கும் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்தார். முதலமைச்சர் பற்றி தவறாக பேசிய ஹெச். ராஜா மீது தமிழக அரசு வழக்கு தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.