ஸ்ரீ ரங்கத்தில் தொடங்கியது வைகுண்ட ஏகாதசி பெருவிழா..!!!
திருச்சியில் அமைந்துள்ள பிரதிபெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா தொடங்கியுள்ளது.அதன் படி முதல் நாளான இன்று நம்பெருமாள் காசுமாலை அலங்காரத்தில் புறப்பாடு வெகு விமரிசையாக நடைபெற்றது. மேலும் மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் நீள்முடி கொண்டையுடனும் , வைர அபயகஸ்தரம், காசு மாலை மற்றும்முத்து மாலை அலங்காரத்துடன் கண்ணை கவரும் விதத்தில் புறப்பட்ட நம்பெருமாள் அர்ஜுன மண்டபம் சென்றடைந்தார்.
நம் பெருமாள் வருகை ஒட்டி அங்கு அங்கு திரண்டிருந்த பக்தர்கள், பக்தி கோஷங்களுடன் நம்பெருமாளை வழிபட்டனர். அர்ஜுன மண்டபத்தில் மாலை வரை பக்தர்களுக்கு சேவை சாதித்தருளுவார். மாலை வரை இருந்த அவர் அதன் பின் அங்கிருந்து புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மீண்டும் மூலஸ்தானம் சென்றடைகிறார்.