ஸ்டெர்லைட் போராட்டம்: 12 பேரிடம் போலீசார் கிடுக்குப்புடி விசாரணை..!

Default Image

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 22-ந் தேதி நடந்த போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கி சூடு நடத்தினர். இதுதொடர்பாக போலீசார் 243 வழக்குகள் பதிவு செய்து 197 பேரை கைது செய்தனர். இதில் 173 பேர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. தூத்துக்குடியில் அமைதியான சூழல் திரும்பி உள்ளது. இதைத்தொடர்ந்து வழக்குகளில் தொடர்புடையவர்களை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்காக 5 தனிப்படைகள் தூத்துக்குடியில் முகாமிட்டு உள்ளன.

கடந்த 22, 23-ந் தேதிகளில் நடந்த கலவர காட்சிகள் தொடர்பான வீடியோ பதிவுகள், புகைப்படங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன. சுமார் 500 புகைப்படங்கள், தூத்துக்குடி ஆயுதப்படை மைதானத்தில் வைக்கப்பட்டு உள்ளன. இந்த புகைப்படங்களில் உள்ளவர்களை அடையாளம் காண்பதற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கனவே தனிப்பிரிவு போலீசாக பணிபுரிந்து அனுபவம் மிக்கவர்களை அழைத்து வந்து புகைப்படங்களை காண்பித்து வருகின்றனர்.

இதன்மூலம் ஏராளமானவர்கள் அடையாளம் கண்டறியப்பட்டு உள்ளனர். இதில் அடையாளம் கண்டறியப்பட்டவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு தனிப்படையினர் நேற்று அதிகாலை முதல் கைது நடவடிக்கைகளில் இறங்கினர்.

அதன்படி போராட்டங்களை முன்னின்று நடத்திய 9 பேரை பிடித்து போலீஸ் அதிகாரிகள் நேரடி விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோன்று மதுரையை சேர்ந்த மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த 3 பேரையும் போலீசார் பிடித்து வந்துள்ளனர்.

ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்ட 12 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாலும், மேலும் சிலரை கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருவதாலும் தூத்துக்குடியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்