ஸ்டெர்லைட் பற்றி ஒருநாள் அல்ல ஆண்டு முழுவதும் விவாதிக்க அதிமுக தயார்! ஸ்டாலின் தயாரா?அமைச்சர் ஜெயக்குமார்

Default Image

ஸ்டெர்லைட் பற்றி ஒருநாள் அல்ல ஆண்டு முழுவதும் விவாதிக்க அதிமுக தயார். ஸ்டாலின் தயாரா? என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்விஎழுப்பியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,  சட்டப்பேரவைக்கு வந்து திமுக பேசட்டும். அவர்களது துரோகத்தை நாங்கள் கூறுகிறோம். ஸ்டெர்லைட் ஆலையை மூடியது மூடியதுதான். அரசாணை எங்கே போனாலும் செல்லும் என்றும்  அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

முன்னதாக  ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டதாக சட்டசபையில் நேற்று  முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கருத்து தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், “ஸ்டெர்லைட் ஆலை தொடங்குவதற்கு யார் காரணம் என்பது பற்றி சட்டமன்றத்தில் விவாதிக்க நானும், திமுக எம்எல்ஏக்களும் தயாராக உள்ளோம். முதல்வர் தயாராக உள்ளாரா என்பதை தெரிவிக்கட்டும்” என கூறியுள்ளார்.
மேலும், “ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதாக அமைச்சரவையை கூட்டி கொள்கை முடிவு எடுத்தால், சட்டமன்ற கூட்டத் தொடரில் திமுக பங்கேற்க தயார்” எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live
Mayandi who was murdered in Nellai Court
American YouTuber - jaystreazy
basit ali about Ravichandran Ashwin
Haryana Ex OmPrakashChautala
TN Assembly
arrest