ஸ்டெர்லைட் நிர்வாகத்திடம் தூத்துக்குடி போலீஸ் நிர்வாகம் லஞ்சம்!பரபரப்பு தகவல் தெரிவித்த அதிமுக எம்.பி!
அதிமுக எம்.பி சசிகலா புஷ்பா ,ஸ்டெர்லைட் நிர்வாகத்திடம் போலீஸூம் மாவட்ட நிர்வாகமும் லஞசம் வாங்கிவிட்டதா என தமிழக அரசுக்கு கேள்வியெழுப்பியுள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 2013ல் தான் தாத்துக்குடி மேயராக இருந்தபோது ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது என கூறியுள்ளார்.
இதேபோல் இன்று தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பு போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.இதனால் பொதுமக்கள் அனைவரும் அலறியடித்து ஓடினர்.
மேலும் தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் போலீசார் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். போலீசார் தடியடி நடத்தினர்.
இந்நிலையில் துப்பாக்கிச்சூடு சம்பத்தை கண்டித்து தூத்துக்குடியில் உள்ள பிரையன்ட் நகரில் காவல்துறை வாகனத்திற்கு தீ வைக்கபட்டது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.