தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் பல்வேறு பரபரப்பான சூழல்களுக்கு இடையே இன்று தொடங்குகிறது.
தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் மார்ச் 19ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை நடைபெற்றது. பின்னர் தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது. ஜூலை 9ம் தேதி வரை, மொத்தம் 23 நாட்கள் இந்தக் கூட்டத் தொடர் நடைபெறும் என்று அலுவல் ஆய்வுக் கூட்டத்திற்குப் பின் சபாநாயகர் தனபால் அறிவித்தார்.
காவிரி விவகாரம், ஸ்டெர்லைட், குரங்கணி தீவிபத்து, அரசு ஊழியர்கள் போராட்டம், நீட் தேர்வு, குட்கா விவகாரம் உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதனால், இந்தக் கூட்டத் தொடர் முழுவதுமே அனல் பறக்கும் எனத் தெரிகிறது.
மேலும் ஸ்டெர்லைட் துப்பாகிச்சூடு விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது. தூத்துக்குடி எம்எல்ஏ சண்முகநாதன், தமிமுன் அன்சாரி, தினகரன் ஆகிய மூவரில் ஒருவர் தீர்மானம் கொண்டு வருகின்றனர். அவசர கவனதீர்மானமாக ஸ்டெர்லைட் விவகாரம் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு வரப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : வந்துச்சே வசூல் மழை தான்...வந்துச்சே வசூல் மழை தான்... என்கிற அளவுக்கு புஷ்பா 2 திரைப்படத்தின் வசூலானது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்க முதலே குறைந்து வந்த நிலையில், இன்று ஒரே நாளில்…
மெக்சிகோ: புகழ்பெற்ற WWE மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ சீனியர், தனது 66வது வயதில் காலமானார். இவரது மறைவு WWE-ன்…
சென்னை: வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், சென்னைக்கு கிழக்கு - வடகிழக்கே சுமார்…
கோவை : நல்லட்டிபாளையம், மேட்டுபாவி, பனப்பட்டி பகுதி, கொத்தவாடி திண்டுக்கல் : கொசவபட்டி, எம்மகலாபுரம், ராகலாபுரம், கூவனுத்து, வள்ளிப்பட்டி, கல்வார்பட்டி, கெய்தேயன்கோட்டை,…
சென்னை : அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக பற்றி பேசி வருகிறார். மற்றொரு பக்கம் திமுகவை சேர்ந்த…