ஆற்றை நாசமாக்கும் ஸ்டெர்லைட் ஆலை கழிவு..!மாவட்ட ஆட்சியர் அகற்ற..!கேடு விதித்த உயர்நீதி மன்ற கிளை பளார்..!
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உப்பாற்றில் கொட்டப்படுகின்ற கழிவுகள் யாரால் கொட்டப்படுகிறது என்று பார்த்தால் அது அங்கு பெரும் கலவரத்தை ஏற்படுத்தி மக்களின் உயிரை துப்பாக்கியால் காவு வாங்கிய ஸ்டெர்லைட் ஆலை தான் இந்த கழிவுகளை கொட்டுகிறது என்று காந்திமதி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
அதில் ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளால் தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக தனது மனுவில் தெரிவித்தார்.
இந்த வழக்கினை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைகிளை ஸ்டெர்லைட் ஆலைக் கழிவுகளை அகற்றி வேண்டும். மேலும் அறிக்கை அளிக்கவும் அம்மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த அறிக்கை ஜனவரி 7க்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று கேடு வித்தித்துள்ளது.