ஸ்டெர்லைட் எதிராக வருகிற 22 ம் தேதி மாபெரும் மக்கள் போராட்டம் ,நீதிமன்றம் திடீர் உத்தரவு..!

Published by
Dinasuvadu desk
ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்க  நிர்வாகிகளுக்கு தூத்துக்குடி கோர்ட்டில் வரும் மே 21 க்குள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி மே 22 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாந்தன் தெரிவித்தார்.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த பொது அவர் கூறியதாவது..ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என தூத்துக்குடி மாநகர, கிராம மக்கள் கூட்டமைப்பு முடிவின்படி,  மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி மே 22 ஆம் தேதி நடைபெறும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து முழு கடையடைப்பு நடத்த வணிகர் சங்கங்களும் முடிவெடுத்துள்ளன. 22 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கியும், ஸ்டெர்லைட் ஆலை முன்பும் மக்கள் பெருந்திரளாகக் கூடி போராட்டம் நடத்த இருக்கிறார்கள். அறவழியில் நடைபெறும் இந்த முற்றுகைப் போராட்டத்தை தடுத்தால், தூத்துக்குடி வட்டாரத்தில் உள்ள மத்திய, மாநில அரசுகளின் அலுவலகங்களை ஆங்காங்கே மக்கள் முற்றுகையிட்டு மாற்று போராட்டத்தை முன்னெடுப்பார்கள் என்றார்.         
இந்த நிலையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்க  நிர்வாகிகளுக்கு தூத்துக்குடி கோர்ட்டில் வரும் மே 21 க்குள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில் வருகின்ற மே  22ம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்களை ஒன்று திரட்டி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை செய்து போராட்டம் ,மற்றும் வன்முறை செயல்களில் ஈடுபட திட்டம் வகுத்துள்ளதாகவும் , பொது மக்களின் அமைதியை கெடுக்கும்  எண்ணத்தை  தடுக்கும் பொருட்டு  தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் குற்ற விசாரணை நடைமுறை சட்டப்பிரிவு 107-ன் கீழ் விசாரணை மேற்கொள்ளும் பொருட்டு தெளிவுபடுத்தியுள்ளார். இதனால் தூத்துக்குடி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க  நீதிபதி உத்தரவு பிறப்பித்து  நோட்டீஸ்  அனுப்பி உள்ளார்.

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : சிறப்பு யாகம் நடத்தி ‘புனித நீர்’ தெளித்த தேவஸ்தானம்.!

திருப்பதி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் தேவஸ்தான லட்டுகளில் விலங்கின் கொழுப்புகள் கலந்ததாக சமீபத்திய…

1 hour ago

வார தொடக்கத்தில் உச்சம் தொட்ட தங்கம் விலை!

சென்னை : வார தொடக்க நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து…

1 hour ago

செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா வரலாற்று சாதனை! பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

புதாபெஸ்ட் : ஹங்கேரியில் நடைபெற்று வந்த இந்த ஆண்டிற்க்கான மற்றும் 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், ஓபன் பிரிவில் இந்திய…

2 hours ago

இலங்கையின் 9-வது அதிபராக பதவியேற்றார் அநுர குமார திசநாயக.!

கொழும்பு : இலங்கையின் 9-ஆவது அதிபர் தேர்தல் கடந்த (21-ம் தேதி) சனிக்கிழமை நடைபெற்றது. பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை,…

2 hours ago

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : ரவுடி சீசிங் ராஜா என்கவுண்டரில் சுட்டுக் கொலை.! நடந்தது என்ன.?

சென்னை : பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி…

2 hours ago

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

16 hours ago