ஸ்டெர்லைட் எதிராக வருகிற 22 ம் தேதி மாபெரும் மக்கள் போராட்டம் ,நீதிமன்றம் திடீர் உத்தரவு..!
ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்க நிர்வாகிகளுக்கு தூத்துக்குடி கோர்ட்டில் வரும் மே 21 க்குள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி மே 22 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாந்தன் தெரிவித்தார்.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த பொது அவர் கூறியதாவது..ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என தூத்துக்குடி மாநகர, கிராம மக்கள் கூட்டமைப்பு முடிவின்படி, மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி மே 22 ஆம் தேதி நடைபெறும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து முழு கடையடைப்பு நடத்த வணிகர் சங்கங்களும் முடிவெடுத்துள்ளன. 22 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கியும், ஸ்டெர்லைட் ஆலை முன்பும் மக்கள் பெருந்திரளாகக் கூடி போராட்டம் நடத்த இருக்கிறார்கள். அறவழியில் நடைபெறும் இந்த முற்றுகைப் போராட்டத்தை தடுத்தால், தூத்துக்குடி வட்டாரத்தில் உள்ள மத்திய, மாநில அரசுகளின் அலுவலகங்களை ஆங்காங்கே மக்கள் முற்றுகையிட்டு மாற்று போராட்டத்தை முன்னெடுப்பார்கள் என்றார்.
இந்த நிலையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்க நிர்வாகிகளுக்கு தூத்துக்குடி கோர்ட்டில் வரும் மே 21 க்குள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில் வருகின்ற மே 22ம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்களை ஒன்று திரட்டி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை செய்து போராட்டம் ,மற்றும் வன்முறை செயல்களில் ஈடுபட திட்டம் வகுத்துள்ளதாகவும் , பொது மக்களின் அமைதியை கெடுக்கும் எண்ணத்தை தடுக்கும் பொருட்டு தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் குற்ற விசாரணை நடைமுறை சட்டப்பிரிவு 107-ன் கீழ் விசாரணை மேற்கொள்ளும் பொருட்டு தெளிவுபடுத்தியுள்ளார். இதனால் தூத்துக்குடி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்து நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.