ஸ்டெர்லைட் ஆலை கண்டிப்பாக திறக்கப்படும்! தூத்துக்குடி போராட்டத்தை பின்னணியில் இருந்து இயக்கியது சீன அரசு!ராமசுப்பிரமணியன்

Default Image

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டுமென்ற ரஜினியின் கருத்தில் வேறுபடுகிறேன் என்று ராமசுப்பிரமணியன்(முன்னால் பாஜக உறுப்பினர்) தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கூறுகையில், ஸ்டெர்லைட் ஆலை கண்டிப்பாக திறக்கப்பட வேண்டும்.தூத்துக்குடி சம்பவத்தின் பின்னணியில் சர்ச்சுகளின் சதி இருக்கின்றது”.”தூத்துக்குடி போராட்டத்தை பின்னணியில் இருந்து இயக்கியது சீன அரசின் சதி” என்றும் ராமசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக  தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினார்கள். இந்நிலையில் 100வது நாள் போராட்டமான கடந்த 22ந் தேதி கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர். ஆனால் பேரணி வன்முறையாக மாறியதால் போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் 13 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்தனர்.மேலும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

இந்நிலையில் இன்று  நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி சென்றார். துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களை சந்தித்து நலம் விசாரித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்