உயர்நீதிமன்ற மதுரை கிளை, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து விசாரிக்கும் அருணா ஜெகதீசன் ஆணையத்திற்கு தடை விதிக்க மறுத்துள்ளது.
ஒருநபர் ஆணையத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கடந்த மாதம் 22-ஆம் தேதி நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என அரசாணையில் கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலவரம், பொதுச் சொத்துகளுக்கு சேதம் என்பதால் துப்பாக்கிச் சூடு என்று அரசாணையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளதால் அந்த வரம்பை நோக்கியே விசாரணை அமையும் என மனுவில் கூறப்பட்டுள்ளது. விசாரணை தொடர்பாக அனைவரும் தகவல் தரலாம் என்பதற்குப் பதில் துப்பாக்கிச் சூட்டை நேரில் பார்த்த சாட்சிகள் மட்டும் தகவல் தரலாம் என்று கூறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விதிகள் பின்பற்றப்படவில்லை என்றும், விசாரணை ஆணையத்தை ரத்துசெய்யவும் கோரப்பட்டிருந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் சி.டி.செல்வம், பஷீர் அகமது ஆகியோர் அரசுக்கு விசாரணை ஆணையம் அமைக்க அதிகாரம் உண்டு என்று கூறி விசாரணை ஆணையத்துக்கு தடை விதிக்க மறுத்துவிட்டனர்.
எனினும் கலவரம், பொதுச் சொத்துகளுக்கு சேதம் என்பதால் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது குறித்து விசாரணைக்கு உத்தரவு என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளதை மாற்ற முடியுமா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் அது தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் புதன் கிழமைக்கு ஒத்திவைத்தனர்.
ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது என்பது தமிழக அரசின் கொள்கை முடிவு தான் என உயர்நீதிமன்றத்தில் விளக்கம்.
ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது என்று தமிழக அரசின் உயர்மட்ட குழு முடிவுக்கு பின்னரே நடவடிக்கை
தமிழக அரசின் கொள்கை முடிவின் படி நடவடிக்கை என்பதால் ஸ்டெர்லைட் ஆலை இனி இயங்க முடியாது
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் விளக்கம்.
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…
துபாய்: நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டு கார் ரேஸில் பங்கேற்க திட்டமிட்டு…
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இந்த சொர்க்கவாசல்…
சென்னை: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து 4 வயது சிறுமி பலியானது பெரும்…