ஸ்டெர்லைட் ஆலையில் ரசாயன கசிவு உள்ளதாக வந்த தகவலை தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய ஆய்வு நிறைவடைந்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்டிருப்பதாக வெளியான தகவலை அடுத்து உதவி ஆட்சியர் தலைமையிலான வல்லுநர் குழு ஆய்வு நடத்தினர்.
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பிறகும் கூட உள்ளே பணிகள் தொடர்ந்து நடைபெறுவதாக கூறப்படும் புகார் குறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி விளக்கம் அளித்தார். செய்தியாளர்களை சந்தித்த அவர், ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ரசாயன சேமிப்பகம் ஒன்றில் கசிவு ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதாக தெரிவித்தார்.
இது குறித்து ஆய்வு செய்ய உதவி ஆட்சியர் பிரசாத் தலைமையில், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தீயணைப்புத்துறை, வருவய்த்துறை, காவல்துறையினர் அடங்கிய வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்தக் குழு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு நடத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.
கசிவு ஏதேனும் ஏற்பட்டு இருந்தால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். இதனிடையே வல்லுநர் குழுவானது ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு நடத்தினர்.
தற்போது ஸ்டெர்லைட் ஆலையில் ரசாயன கசிவு உள்ளதாக வந்த தகவலை தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய ஆய்வு நிறைவடைந்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை: 2025 பொங்கல் திருநாளையொட்டி 3186 தமிழக காவல் துறை மற்றும் சீருடை அலுவலர்கள் பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க முதலமைச்சர்…
சென்னை : தமிழ் சினிமாவில் நல்ல கதை கருத்தியல் உள்ள திரைப்படங்களை விறுவிறுப்பாகவும் உயிரோட்டமாகவும் திரை ரசிகர்கள் கொண்டாடும் விதமாக…
சென்னை: பொங்கல் பரிசாக பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.200 அதிகரித்து சவரனுக்கு…
சென்னை : தந்தை பெரியார் பற்றி நம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய கருத்துக்கள் அரசியல் களத்தில் கடும்…
டெல்லி : அரசு வேலை வாங்கி தருவதாக 100க்கும் மேற்பட்டோரிடம் கோடிக்கணக்கில் பண மோசடி, அதிமுவின் இரட்டை இலை சின்னத்தை…
சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின் அணி…