ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து 1,110 மெட்ரிக் டன் கந்தக அமிலம் வெளியேற்றம் : சந்தீப் நந்தூரி..!
மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து இதுவரை ஆயிரத்து 110 மெட்ரிக் டன் கந்தக அமிலம் வெளியேற்றப் பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள கிடங்கில் கந்தக அமில கசிவு ஏற்பட்டதை அடுத்து, அவை டேங்கர் லாரிகள் மூலம் அகற்றப்பட்டு வருகின்றன. இப்பணிகள் 5-வது நாளாக இன்றும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, இன்னும் 200 முதல் 300 மெட்ரிக் டன் கந்தக அமிலம் ஆலையில் இருப்பதாகவும், இவை முற்றிலும் அகற்றப்படும் என்றும் தெரிவித்தார்.
இதுதவிர, ஆலையில் இருப்பில் உள்ள வேறு அமிலங்களையும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சந்தீப் நந்தூரி கூறினார்.