ஸ்டெர்லைட் ஆலையிடம் இருந்து பெறப்பட்ட பணம் திருப்பி தரப்படும்! சிப்காட் நிர்வாகம்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தரப்பட்ட நிலத்தை ரத்து செய்தது தமிழக அரசு. ஸ்டெர்லைட்டின் 2வது யூனிட்டுக்காக சிப்காட் ஒதுக்கிய நிலம் ரத்து செய்யப்பட்டது.பொதுமக்களின் தொடர் எதிர்ப்பு மற்றும் போராட்டம் காரணமாக நிலம் ஒதுக்கீடு ரத்து என்று சிப்காட் நிர்வாகம் அறிவித்துள்ளது.ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு ஒதுக்கப்பட்ட 342.22 ஏக்கர் நிலம் திரும்பப் பெறப்படுகிறது.
2005,2006,2009,2010 ஆம் ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட நிலங்கள் ரத்து செய்யப்படுகின்றன.நிலத்திற்காக ஸ்டெர்லைட் ஆலையிடம் இருந்து பெறப்பட்ட பணம் திருப்பி தரப்படும் என்றம் ஸ்டெர்லைட் ஆலையால் உடல்நலம் பாதிப்பு ஏற்படுவதாக மக்கள் புகார் தெரிவித்ததை அடுத்து சிப்காட் நிர்வாகம் அதிரடி முடிவு.
இதற்கு முன் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினார்கள். இந்நிலையில் 100வது நாள் போராட்டமான கடந்த 22ந் தேதி கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர். ஆனால் பேரணி வன்முறையாக மாறியதால் போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் 13 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்தனர். 150-க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அரசாணை வெளியிட்டார் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.இதன்படி நேற்று ஆலைக்கும் சீல் வைக்கப்பட்டது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.