ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு!உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு!
ஸ்டெர்லைட் ஆலையில் மின் இணைப்பு கோரிய வழக்கை முடித்து வைத்தது உயர் நீதிமன்ற மதுரை கிளை.
கடந்த 22ஆம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர். இதில் 13 பேர் உயிர் இழந்தனர்.
மேலும் தமிழக அரசின் அரசாணையை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்தார் தூத்துக்குடி ஆட்சியர்.ஆட்சியர் சந்தீப் நந்தூரி முன்னிலையில், அதிகாரிகள் ஆலைக்கு சீல் வைத்தனர் .ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான, தமிழக அரசின் அரசாணை, ஆலையின் நுழைவு வாயிலில் உள்ள கதவில் ஒட்டப்பட்டது.
இந்நிலையில் உயர் நீதிமன்ற மதுரை கிளை, ஸ்டெர்லைட் ஆலையில் தற்காலிக பராமரிப்பு பணி, மின் இணைப்பு கோரிய மனு மீதான அரசு தரப்பு விளக்கத்தை ஏற்று வழக்கை முடித்துவைத்தது.
இது தொடர்பாக ஸ்டெர்லைட் நிர்வாகம் மனு ஒன்றை உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்தது.இந்த மனுவில் ஆலையில் ஏற்பட்ட ரசயான கசிவை சீரமைக்க மின்சாரம் வேண்டும் என மனுவை தாக்கல் செய்தது.
பின்னர் அரசு தரப்பு வாதிடுகையில், ஆய்வின் அடிப்படையில் தூத்துக்குடி ஆட்சியர் குழு அமைத்துள்ளார்.மேலும் 90 நாள்களுக்குள் ஆலையில் உள்ள அமிலங்களை அகற்ற நடவடிக்கை என்று தெரிவித்துள்ளது.
பின்னர் வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற கிளை உயர் நீதிமன்ற மதுரை கிளை, ஸ்டெர்லைட் ஆலையில் தற்காலிக பராமரிப்பு பணி, மின் இணைப்பு கோரிய மனு மீதான அரசு தரப்பு விளக்கத்தை ஏற்று வழக்கை முடித்துவைத்தது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.