ஸ்டெர்லைட் ஆலை:ஓய்வுபெற்ற தலைமை நீதிபதியே ஆய்வுக் குழுவில் இருந்து..!திடீர் விலகல்..!!
ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டு தமிழக அரசு வெளியிட்ட அரசாணைக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. மனுவில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதில் உள்நோக்கம் உள்ளது என்றும், ஆலையால் மாசு ஏற்படுகிறதா என்பதை ஆராய தனியாக குழு அமைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும் என என அண்மையில் பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. மேலும், குழுவில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்ந்த வல்லுநர்கள் இடம் பெற வேண்டும் என்றும், 6 வாரங்களுக்குள் ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஓய்வு பெற்ற நீதிபதி வசீப்தர் தலைமையில் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில், சொந்த காரணங்களுக்காக குழுவில் இருந்து விலகுவதாக வசீப்தர் தெரிவித்துள்ளார்.இவர் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்தில் தலைமை நீதிபதியாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU