ஸ்டெர்லைட்க்கு எதிராக போராடிய மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிருந்தாகாரத் நேரில் ஆறுதல்!

Published by
Venu

கடந்த 22ந் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர். இதில் 13 பேர் உயிர் இழந்தனர். 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதன் தொடர்ச்சியாக காவல்துறை இரவு நேரங்களில் வீடுகளுக்குள் புகுந்து அத்துமீறி ஆண்கள், இளைஞர்கள்,பெண்கள் என அனைவரையும் கைது செய்து வந்தது.

எனவே துப்பாக்கி சூட்டை கண்டித்தும் துப்பாக்கி சூடை நடத்திய அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் தூத்துக்குடி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன பேரணியும்,பொதுக்கூட்டமும் நடத்த காவல்துறையிடம் அனுமதி கோரினர்.ஆனால் அதற்கு காவல்துறை தரப்பில் ஆகஸ்ட் மாதம் வரை எந்த ஒரு அனுமதியும் வழங்கப்பட மாட்டாது என்று மறுப்பு தெரிவித்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தூத்துக்குடி மனித உரிமை மீறலை கண்டித்தும் பேரணி பொதுக்கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கோரியும் ஒரு மனுவை தாக்கல் செய்தனர். அந்த மனுவானது இன்று விசாரணைக்கு வந்தது.இதை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன் பல்வேறு நிபந்தனைகளை விதித்து பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

இந்நிலையில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று மாலை 5 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

இந்த பொதுக்கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாநகர செயலாளர் தா.ராஜா தலைமையில் நடைபெறுகிறது.இதில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினறும்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினறுமான பிருந்தாகாரத் சிறப்புரையாற்றுகிறார்.

மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் சங்கரன்,புறநகர் செயலாளர் ராஜா ஆகியோர் முன்னிலை ஆகியோர் வகிக்கின்றனர்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர்.கே.பாலகிருஷ்ணன்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் உ .வாசுகி,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் ஆகியோர் உரையாற்றுகின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் கே.எஸ்.அர்ஜூனன் வரவேற்புரை மற்றும் நன்றியுரையாற்றுகிறார்.

மேலும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டை கண்டித்து பொதுக்கூட்டம் இன்று நடைபெரும் நிலையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினறும்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினறுமான பிருந்தாகாரத் தூத்துக்குடி வந்தடைந்தார்.

பின்னர் பிருந்தாகாரத் தூத்துக்குடி வந்தவுடன் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மடத்தூர்,பண்டாரம்பட்டி,குமார ரெட்டியாபுரம் மக்களை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். பிருந்தாகாரத்வுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் உ .வாசுகி,மத்திய குழு உறுப்பினர் பி சம்பத்,மாநில குழு உறுப்பினர் ஆர்.மல்லிகா மற்றும் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் கே.எஸ்.அர்ஜூனன் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

உத்தரப்பிரதேசம்: மருத்துவமனையில் மின்கசிவால் தீ விபத்து – 10 குழந்தைகள் உயிரிழப்பு!

உத்தரப்பிரதேசம்: மருத்துவமனையில் மின்கசிவால் தீ விபத்து – 10 குழந்தைகள் உயிரிழப்பு!

உத்தரப்பிரதேசம் : ஜான்சி மாவட்டத்தில் மகாராணி லட்சுமிபாய் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்றிரவு நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில், பச்சிளம்…

8 mins ago

SA vs IND : இரண்டு சதம் …தொடரை கைப்பற்றிய இந்திய அணி! சஞ்சு, திலக் அதிரடியில் துவம்சமான தென்னாப்பிரிக்கா!

ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…

7 hours ago

தமிழகத்தில் சனிக்கிழமை (16/11/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…

10 hours ago

“கட்சிக்கு துரோகம் செய்தால் மன்னிக்கவே மாட்டேன்”…அமைச்சர் துரைமுருகன் பேச்சு!

வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…

11 hours ago

கங்குவா சவுண்ட் அதிகமா இருக்கு பாஸ்! ஞானவேல் ராஜா கொடுத்த ஐடியா!

சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…

12 hours ago

சாமியே சரணம் ஐயப்பா! சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…

13 hours ago