பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் காவிரி பிரச்னைக்காக போராட்டத்தில் ஈடுபட்டு, கைதாகி மாலையில் விடுதலையாகும் ஸ்டாலின், வாரியம் அமைக்கும் வரை சிறையை விட்டு வெளியே செல்ல மாட்டேன் என்று சிறையிலிருக்க தயாரா? என தெரிவித்துள்ளார்.
தருமபுரியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, ‘தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், வைகோ, திருமா ஆகியோரால் மறுக்கப்பட்ட காவிரி நீர், பா.ஜ.கவால் மட்டுமே கொண்டு வர முடியும். இவர்கள் எவ்வளவுதான் போராடினாலும் காவிரி தண்ணீர் கிடைக்காது. தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைக்காததற்கு காரணம் தி.மு.க தான். 1974-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் இருந்த வழக்கை, தங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் வந்துவிட கூடாது என இந்திராகாந்தி அம்மையாரின் பேச்சை கேட்டு, வழக்கை கலைஞர் திரும்ப பெற்றார். அதனால்தான் காவிரி பிரச்சனை நமக்கு இன்றுவரை தீர்க்கப்படாத பிரச்சினையாக உள்ளது.
காவிரி பிரச்சினையில் தி.மு.கவும், காங்கிரசும்தான் பச்சை துரோகம் செய்துவிட்டு, இன்று நல்லவர்கள் போல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டு, கைதாகி மாலையில் விடுதலையாகும் ஸ்டாலின், வாரியம் அமைக்கும் வரை சிறையை விட்டு வெளியே செல்ல மாட்டேன் என்று சிறையிலிருக்க தயாரா? அனைவரும் கற்பூரம் ஏற்றி தான் நிகழ்ச்சிகளை தொடங்குவார்கள். ஆனால் வைகோ தொண்டரை எரித்து நடைப்பயணத்தை தொடங்கியுள்ளார். இதற்கு உரிய விசாரணை தேவை. தமிழக நலனில் மத்திய அரசு அதிகப்படியான அக்கறை செலுத்தி வருகிறது. கால தாமதமானாலும் நிச்சயம் காவரி நீர் தமிழகத்திற்கு வரும்’ என தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை: கடந்த நான்கு நாட்களாக ஏந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனையான ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது.…
துபாய்: துபாயில் பயிற்சியின்போது நடிகர் அஜித் சென்ற ரேஸ் கார் விபத்தில் சிக்கியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிவேகமாக வந்த கார்,…
சென்னை : கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை அருகில் பாலியல் வன்கொடுமை தொடர்பாக சிறுமியின் பெற்றோர் புகார் அளிக்க சென்றபோது…
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. நாளை (9ஆம்…
தென்னாப்பிரிக்கா : SA20 கிரிக்கெட் போட்டி என்பது தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆகும். இந்த போட்டியில் 6…
சென்னை : சட்டப்பேரவை கூட்டத்தொடரை 11ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று இரண்டாவது நாளில் மறைந்த காங்கிரஸ்…