ஸ்டாலின் வாரியம் வரும் வரை சிறையில் இருக்க தயாரா?

Default Image

பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் காவிரி பிரச்னைக்காக போராட்டத்தில் ஈடுபட்டு, கைதாகி மாலையில் விடுதலையாகும் ஸ்டாலின், வாரியம் அமைக்கும் வரை சிறையை விட்டு வெளியே செல்ல மாட்டேன் என்று சிறையிலிருக்க தயாரா? என  தெரிவித்துள்ளார்.

தருமபுரியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, ‘தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், வைகோ, திருமா ஆகியோரால் மறுக்கப்பட்ட காவிரி நீர், பா.ஜ.கவால் மட்டுமே கொண்டு வர முடியும். இவர்கள் எவ்வளவுதான் போராடினாலும் காவிரி தண்ணீர் கிடைக்காது. தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைக்காததற்கு காரணம் தி.மு.க தான். 1974-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் இருந்த வழக்கை, தங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் வந்துவிட கூடாது என இந்திராகாந்தி அம்மையாரின் பேச்சை கேட்டு, வழக்கை கலைஞர் திரும்ப பெற்றார். அதனால்தான் காவிரி பிரச்சனை நமக்கு இன்றுவரை தீர்க்கப்படாத பிரச்சினையாக உள்ளது.

காவிரி பிரச்சினையில் தி.மு.கவும், காங்கிரசும்தான் பச்சை துரோகம் செய்துவிட்டு, இன்று நல்லவர்கள் போல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டு, கைதாகி மாலையில் விடுதலையாகும் ஸ்டாலின், வாரியம் அமைக்கும் வரை சிறையை விட்டு வெளியே செல்ல மாட்டேன் என்று சிறையிலிருக்க தயாரா? அனைவரும் கற்பூரம் ஏற்றி தான் நிகழ்ச்சிகளை தொடங்குவார்கள். ஆனால் வைகோ தொண்டரை எரித்து நடைப்பயணத்தை தொடங்கியுள்ளார். இதற்கு உரிய விசாரணை தேவை. தமிழக நலனில் மத்திய அரசு அதிகப்படியான அக்கறை செலுத்தி வருகிறது. கால தாமதமானாலும் நிச்சயம் காவரி நீர் தமிழகத்திற்கு வரும்’ என தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்