ஸ்டாலின் தலைமையில் கூட்டம்..!!
திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்து வருகிறது.
திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைப்பெற்று வருகிறது!
சென்னை: திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைப்பெற்று வருகிறது!திமுக தலைவராக மு.க ஸ்டாலின் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் அவர் தலைமையில் நடைபெறும் முதல் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றுள்ளனர்.
இக்கூட்டத்தில் திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் இடைத்தேர்தல், லோக்சபா தேர்தல் ஆகியன குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. மேலும் விழுப்புரத்தில் வரும் 15-ஆம் நாள் நடைபெறவுள்ள திமுக-வின் முப்பெரும் விழா குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
DINASUVADU