ஸ்டாலினுடன் கூட்டணி வைத்துக்கொள்வது தற்கொலைக்கு சமம்!டி.டி.வி. தினகரன்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச்செயலர் டி.டி.வி. தினகரன், திமுக உடன் கூட்டணி வைத்துக்கொள்வது தற்கொலைக்கு சமம் என தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை, அமமுக துணை பொதுச்செயலர் தினகரன் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக உடன் கூட்டணி வைத்து அதிமுக அரசு கவிழ்க்க முயன்றதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறுவது அடிப்படை ஆதாரமற்றது என்றார்.
திமுக, பாஜக ஆகிய இரண்டு கட்சிகளுடன் எப்போதும் கூட்டணி இல்லை என்றும் தினகரன் தெரிவித்தார். பெண் பத்திரிகையாளரை தவறாக பேசிய நடிகர் எஸ்.வி. சேகரை இதுவரை கைது செய்யாத காவல்துறை, போராட்டம் நடத்தியதற்காக வேல்முருகனை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.