ஸ்டாலினுக்கே அல்வா கொடுத்த செந்தில் பாலாஜி…!!

Default Image

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கரூர் மாவட்டத்தில் 2000 க்கும் மேற்பட்ட அமமுக தொண்டர்கள் தாய் கழகமான அதிமுகவிற்கு திரும்பி வருகின்றனர். முதலில் தினகரனை நம்பி அதிமுகவில் பல்வேறு முக்கியத்துவத்தை பெற்றிருந்த செந்தில் பாலாஜி சென்றார். ஆனால் நடந்ததோ அவரே எதிர்பார்க்காதது. அதிமுகவில் அவருக்கு இருந்த முக்கியத்துவம் அமமுகவில் பாதி கூட கிடைக்கவில்லை.ஆனால் செந்தில் பாலாஜியை நம்பி அதிமுகவில் இருந்த பலரும் அமமுக கட்சியில் இணைந்தனர்.
மேலும் கரூர் தொகுதியை பொறுத்தவரை அமமுக தொண்டர்கள் அதிமுகவிற்கு திரும்ப தொடங்கி விட்டனர்.கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதி கரூர் ஒன்றியம் புஞ்சைப் புகழூர் பேரூர் கழக இணைச்செயலாளர் பாப்பாத்தி அம்மாள் அமமுக கட்சியிலிருந்து விலகி, அதிமுகவில் சேர்ந்துவிட்டார்.
இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த, அமமுக கழக அமைப்பு செயலாளர் சோமாத்தூர் .சுப்பிரமணியன் கழகத்தில் தன்னை அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார்
கரூர் அமமுக-வை சேர்ந்த மாவட்ட பாசறை செயலாளர் திரு.வேங்கை ராமசந்திரன் தலைமையில் 80க்கும் மேற்பட்டோர் அமமுக வில் இருந்து விலகி தாய் கழகமான அஇஅதிமுக-வில் தங்களை இணைத்து கொண்டனர்.
கரூர் மாவட்டம் க. பரமத்தி பகுதியைச் சேர்ந்த அமமுக, திமுக மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அந்தந்த கட்சியிலிருந்து விலகி அமமுக க.பரமத்தி தெற்கு ஒன்றிய துணை செயலாளர் கருப்புசாமி தலைமையில் அதிமுகவில் இணைந்தனர்.அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேலம்பாடி ஊராட்சி செயலாளர் செல்லத்துரை தலைமையில் 300க்கும் மேற்பட்டோர் அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்.
சுடாமணி ஊராட்சி கதிர்மங்கலம் அமமுக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்.அவரக்குறிச்சி நகரம் 7 வது 9 வது பகுதியை சேர்ந்த அமமுக உறுப்பினர்கள் 130 பேர் அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்.ஈசநத்தம் பகுதியை சேர்ந்த அமமுக மற்றும் மற்ற கட்சி உறுப்பினர்கள் 160 பேர் அதிமுகவில் இணைந்தனர்.க. பரமத்தி வடக்கு ஒன்றியத்தை சேர்ந்த அமமுக உறுப்பினர்கள் 60 பேர் அதிமுகவில் இணைந்தனர்.புஞ்சை காலகுறிஞ்ச ஊராட்சி ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் மற்றும பலர் அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்.
இப்படி பல பேர் அதிமுகவில் சேர்ந்துவிட்ட நிலையில் இனிமேல் அமமுகவில் இருந்தால் தனக்கு மரியாதை இல்லை என்று கருதிய செந்தில் பாலாஜி, அவசர அவசரமாக திமுகவில் இணைய முயற்சிகளை மேற்கொண்டார். தான் திமுகவிற்கு வந்தால் தன்னோடு அதிக தொண்டர்கள் வருவார்கள் என்றும் திமுகவில் வாக்குறுதி கொடுத்திருக்கிறார். ஏற்கனவே இவரை நம்பி வந்து தங்கள் தலையில் மண்ணை போட்டுக் கொண்ட உறுப்பினர்கள், இனி இவரை நம்பி பயனில்லை என்று தங்களுக்கு வாழ்வளித்த தாய் கழகமான அதிமுகவிலேயே இணைந்துவிட்டனர்.
இன்னும் பல பேர் தாய் கழகமான அதிமுகவில் இணைய தொடங்கி இருக்கின்றனர். அமமுக தொண்டர்களை திமுகவில் இணைத்து விடுவேன் என்று திமுக தலைவர் ஸ்டாலினுக்கே அல்வா கொடுத்திருக்கிறார் செந்தில் பாலாஜி. ஆனால் எந்த தொண்டர்களை அவர் திமுகவில் இணைப்பார் என்பது செந்தில் பாலாஜிக்கே தெரியாது என்பது தான் உண்மை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்