ஸ்டாலினின் இந்த நிலைமைக்கு காரணம் அழகிரி …! இதுக்கு பேர்தான் அழகிரி எபெக்ட் …!ஸ்டாலினை வச்சி செஞ்ச ஹெச் .ராஜா

Published by
Venu

அழகிரியின்  கூட்டம் தொடர்பாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னையில் மு.க அழகிரி தலைமையில் அவரது ஆதரவாளர்கள் கருணாநிதி சமாதி நோக்கி அமைதி பேரணி நடத்தினர்.பேரணி நடத்துவதற்கு முன்பு அதிரடியாக பேசிய முக.அழகிரி , விமர்சனம் செய்த முக.அழகிரி , குற்றச்சாட்டுகளை முன் வைத்த முக.அழகிரி மெரினா பேரணி முடிந்து எவ்விதமான அறிக்கையும் வெளியிடாதது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Image result for அழகிரி

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமைதி பேரணி ஒரு வழியாக முடிந்துள்ளது.ஆனால் முக.அழகிரி முக்கிய அறிவிப்பு எதையும் வெளியிடாதது பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.பெரிய எதிர்பார்ப்புடன் இன்று நடந்த பேரணியின் முடிவில் பெரிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்ப்பு நிலவியது. அதாவது அழகிரி தனது அரசியல் அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.இல்லையென்றால் திமுக குறித்தும் ,முக ஸ்டாலின் குறித்தும் பேசுவார் என்று எதிர்ப்பாசர்க்கப்பட்டது.ஆனால் முக.அழகிரி எதையுமே பேசாதது ஒரு பரபரப்பாக இருக்கின்ற்றது.

இன்று காலை மெரினாவில் பேரணியின் முடிவில் அண்ணா, கருணாநிதி சமாதியில் அழகிரி அஞ்சலி செலுத்தினார். அதன்பின் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அதில் பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி. இது முழுக்க முழுக்க அஞ்சலி பேரணி. இதில் அரசியல் நோக்கம் இல்லை என்றார். இது தொண்டர்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.முக அழகிரி இப்படி பேசுவார் என்று தொண்டர்கள் உட்பட யாரும் நினைக்கவில்லை.

இந்த பேரணி நடத்துவதால் கட்சியில் தொண்டர்கள் தன் பக்கம் வருவார்கள் என்று எதிர்பார்த்தார் முக அழகிரி . ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. ஒரு காலத்தில் அவருக்கு நெருக்கமாக இருந்தவர்களே அவரை வந்து சந்திக்கவில்லை. ஸ்டாலினால் நீக்கப்பட்டவர்கள் கூட அழகிரியை சந்திக்கவில்லை.பேரணி குறித்து முக அழகிரி நடத்திய ஆலோசனை கூட்டத்திலும் தொண்டர்கள் குறைவாக இருந்தனர். பேரணி குறித்தும் , அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்தும் முக.அழகிரி நடத்திய ஆலோசனை கூட்டத்திற்கு தினமும் 5 முதல் 6 பேர் மட்டுமே அழகிரியை சந்தித்தனர்.

நேற்று கூட அவரது பேரணிக்கு 7 ஆயிரம் பேர் மட்டுமே வந்து இருந்தனர்.நேற்று அழகிரி கனிமொழியை சந்திக்கவில்லை. ஸ்டாலின் திமுக தலைவராக பொறுப்பேற்றதற்கு கனிமொழி ஏதும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதனால் அப்போதே அழகிரி கனிமொழி உறவில் விரிசல் ஏற்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.காரணம் அழகிரி, கட்சியில் தனக்கு முன்னைப்போல செல்வாக்கு இல்லை என்று உணர்ந்து திமுகவின் தலைவராக ஸ்டாலினை ஏற்றுக்கொள்ள தயார் என்று தெரிவித்தார். ஆனால் அதன்பின்பும் கூட திமுக தரப்பு அவரை கண்டுகொள்ளவில்லை. ஒருவரும் பேட்டி கூட இதை பற்றி அளிக்கவில்லை. இதன் காரணமாகவே அவர் முக்கிய அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த கூட்டம் தொடர்பாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  ஹெச்.ராஜா தனது ட்விட்டரில் ஸ்டாலின் கருணாநிதி சமாதியில் அமர்ந்திருக்கும் படத்தை வெளியிட்டு இதற்கு பேரு அழகிரியால் வந்த பாதிப்புன்னு சொல்லலாமா? என்று பதிவிட்டுள்ளார். இதை அவரது பதிவில் திமுகவினர் பலர் கண்டித்துள்ளனர்.

Published by
Venu

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

2 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

10 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

23 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago