ஸ்டாலினின் அரசியல் மூவ்…சோனியா தமிழகம் வருகை…மெகா கூட்டணியாக மாற வாய்ப்பு….!!
திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும் , தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கருணாநிதி அவர்களின் முழு உருவச்சிலை வருகின்ற 16ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் திறக்கப்பட உள்ளது.இந்த சிலை திறப்பு விழாவிற்கு தேசியளவில் உள்ள கட்சிகளின் தலைவர்களுக்கு திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.இந்நிலையில் இன்று திமுக தலைமையகத்தில் இருந்து வந்த செய்தி குறிப்பில் வருகின்ற 16-ஆம் தேதி கருணாநிதி சிலை திறப்பில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அகில இந்திய தலைவர் சோனியா காந்தி பங்கேற்பது உறுதி என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தேசிய கட்சிகள் இதில் பங்கேற்பது மிகவும் முக்கியத்துவமாக பார்க்கப்படுகின்றது.இந்த விழாவில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயிடு மற்றும் கேரள முதல்வர் பினராய் விஜயன் பங்கேற்கிறார்.இதனால் தேசியளவில் இது ஒரு மெகா கூட்டணியாக உருவாகுமென்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
dinasuvadu.com