வேல்முருகனுக்கு சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய வழக்கில் வரும் 22 ம் தேதிவரை காவல் நீட்டிப்பு!
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகனுக்கு உளுந்தூர்ப்பேட்டை சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய வழக்கில், வரும் 22 ம் தேதிவரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு 15 நாட்கள் ஆன நிலையில், வேல்முருகன் இன்று மீண்டும் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவரை வரும் 22 ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.