வேலைவாய்ப்பு : அழைப்பு உங்களுக்குத்தான்!
தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (டி.என்.எம்.ஆர்.பி.) என்று அழைக்கப்படுகிறது. தற்போது இந்த அமைப்பு உதவி மருத்துவ அதிகாரி (லெக்சரர்- யோகா மற்றும் நேச்சுரோபதி) பணிக்கு விண்ணப்பம் கோரி உள்ளது. மொத்தம் 73 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இட ஒதுக்கீடு வாரியான பணியிட விவரத்தை முழுமையான விளம்பர அறிவிப்பில் காணலாம்.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 1-7-2018-ந் தேதியில் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பெறும் பிரிவினர் 57 வயதுடையவர்களாக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.
நேச்சுரோபதி டிப்ளமோ படிப்பு, பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அவர்கள் இந்திய மருத்துவ துறையில் தமிழக வாரியத்தில் தங்கள் பெயரை பதிவு செய்து வைத்திருக்க வேண்டும்.
எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் ரூ.750 கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 7-5-2018-ந் தேதியாகும். இது பற்றிய விவரங்களை www.mrb.tn.gov.in என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.
திருநெல்வேலி கோர்ட்டு
திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர், ஜெராக்ஸ் ஆபரேட்டர், இரவு காவலாளி, துப்புரவு பணியாளர் போன்ற பணியிடங்களுக்கு 37 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், தட்டச்சு தெரிந்தவர்கள் மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. அந்தந்த பணிக்கான கல்வித் தகுதியை இணையதளத்தில் பார்க்கலாம். விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி அனுப்ப வேண்டும். விண்ணப்பம் 28-4-2018-ந் தேதிக்குள் முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், திருநெல்வேலி 627002 என்ற முகவரிக்கு சென்றடைய வேண்டும். மாதிரி விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கவும், இது பற்றிய விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் http://ecourts.gov.in/tn/tirunelveli என்ற முகவரியைபார்க்கலாம்.
ஐ.ஐ.டி. மெட்ராஸ்
மத்திய தொழில்நுட்ப கல்வி மையமான ஐ.ஐ.டி.யின் மெட்ராஸ் கிளையில் ஜூனியர் டெக்னீசியன், என்ஜினீயர், டெபுடி ரிஜிஸ்திரார் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 25 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். அலுவலக பணியிடங்களில் 32 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களுக்கும், அதிகாரி பணியிடங்களில் 50 வயதுடையவர்களுக்கும் வாய்ப்பு உள்ளது. அந்தந்த பணிக்கான வயது வரம்பை இணையதளத்தில் பார்க்கலாம். சிவில், எலக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், மெக்கானிக்கல், கெமிஸ்ட்ரி போன்ற என்ஜினீயரிங், தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு பணிவாய்ப்பு உள்ளது. அதிகாரி தரத்திலான பணிக்கு குறிப்பிட்ட பிரிவுகளில் முதுநிலை பட்டப்படிப்பும், பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் இது பற்றிய விரிவான விவரங்களை https://recruit.iitm.ac.in/external/ என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் 19-5-2018-ந் தேதியாகும்.