வேலூர் அருகே தனியார் ஆலை குடோனில் தீவிபத்து! அனைத்தும் எரிந்ததால், கடும் புகை மூட்டம்!
தனியார் ஊதுபத்தி தயாரிக்கும் தொழிற்சாலை குடோனில் வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே தீவிபத்து ஏற்பட்டதால் அப்பகுதியே புகை மண்டலமானது. வன்னிவேடு பகுதியில் உள்ள இண்டர்நேசனல் அகர்பத்தி என்ற தனியார் ஆலை குடோனில் இன்று காலை தீவிபத்து ஏற்பட்டது. ஊதுபத்திகள் மற்றும் மூலப்பொருட்கள் அனைத்தும் எரிந்ததால், கடும் புகை மூட்டம் ஏற்பட்டது.
தகவலறிந்து ராணிப்பேட்டை, ஆற்காடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 3 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்தனர். நீண்ட நேரம் போராடி அவர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.