வேட்டுக்கு வைத்த வேட்டால்…..12000 கடைக்கு பூட்டு போட்டு போராட்டம்……!!!!குட்டி ஜப்பானில் கொழுந்து விட்டு எரியும் பட்டாசு உற்பத்தியாளர்கள்..!!
பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவிட்டது.இதனால் பட்டாசு விற்பனை இந்தாண்டு தீபாவளிக்கு படுமந்தமாகவே இருந்தது.மேலும் இதனால் சிவகாசி உற்பத்தியாளர்கள் மற்றும் அதில் கூலிக்கு வேலை பார்ப்பவர்களின் வாழ்க்கையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.மேலும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை கண்டித்து சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர் சங்கத்தினர் இன்றுமுதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் கூட்டம் நடைபெற்றது. இதில் சிவகாசியை சார்ந்த சுற்றுவட்டாரப் பகுதி பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.நடைபெற்ற கூட்டத்தில் வெடிகள் உற்பத்திக்கு பேரியம் நைட்ரேட் வெடிபொருளைப்பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இந்த தடைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும்,சரவெடிகளை வெடிக்கக்கூடாது என்றும் வெடி வெடிக்க 2மணி நேரமே வெடி வெடிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் இந்த கட்டுப்பாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இன்றுமுதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது.
இதன்படி சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 1200க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளது.இதனால் நேரடியாகவும் மறைமுகமாகவும் 5 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் கோரிக்கை விடுத்த சங்கம் பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் கூலி தொழிலாளர்கள் ஆகியோரின் வாழ்க்கையை கருத்தில்கொண்டு வெடிகள் வெடிக்க விதித்துள்ள கட்டுப்பாடுகளை உச்சநீதிமன்றம் மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றுப் பட்டாசு உற்பத்தியாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் மாரியப்பன் கேட்டுக்கொண்டுள்ளார்.
DINASUVADU