வேகத்தடைக்கு தடை போட்ட மத்திய அரசு..!காரணத்தை விரிக்கும் விளக்கம்
- தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டிருக்கும் வேகத்தடைகளை அகற்ற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
- வாகனங்கள் தடையில்லாமல் செல்வதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மத்திய அரசு தரப்பில் விளக்கம்.
இது குறித்து மத்திய அரசு தனது உத்தரவில் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் தடையின்றி செல்வதற்கு வழிவகை செய்கின்ற விதமாக அண்மையில் சுங்கச் சாவடிகளில் பாஸ்டேக் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்து இருந்தது தற்பொழுது சுங்கச் சாவடிகள் அமைந்துள்ள பகுதிகள் உள்பட தேசிய நெடுஞ்சாலைகளில் எல்லாம் இருக்கின்ற வேகத்தடைகளை அகற்ற வேண்டும் என்று மத்திய அரசு சிறப்பு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த வேகத்தடையால் வாகன ஓட்டிகளுக்கு கால தாமதம் ஏற்படுகிறது அத்துடன் எரிபொருள் செலவு உள்ளிட்டவைகள் இதன் மூலமாக வெகுவாக குறைவம்,மேலும் ஆம்புலன்ஸ்கள் எல்லாம் உரிய காலத்திற்குள் செல்ல முடியும்.இதனால் வாகனங்களுக்கு ஏற்படும் சேதம் தவிர்க்கப்படுவதும் வாகன ஓட்டிகளும் தடையில்லாமல் பயணிக்கின்ற சூழல் உருவாகும் என்று தெரிவித்துள்ளது.