வெள்ள அபாய எச்சரிக்கை : கட்டமில்லா தொலைபேசி எண் 1077 ..!
கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்டுவரும் கடுமையான மழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பியுள்ளன.இதனால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் உபரி நீர் வெளியேற்றபட்டு வருகின்றன.
5 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியை எட்டி உள்ளது. நீர்வரத்து 68,489 கன அடியாக உள்ளது. நீர் இருப்பு 92.534 டிஎம்சி-யாக உள்ளது. வெளியேற்றம் 30,000 கனஅடி -யாக உள்ளது. கரையோரம் உள்ள 12 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.எடப்பாடியை அடுத்துள்ள பூலாம்பட்டி காவிரி கரையோர பகுதி மக்கள் தாழ்வான பகுதிகளில் இருக்க வேண்டாம் என ஒலிபெருக்கி பொருத்திய ஆட்டோ மூலம் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.மேலும் தகவல்களை பெற கட்டமில்லா தொலைபேசி எண் 1077 என்ற எண்ணை பயன்படுத்தலாம் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.