வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தொடர்ந்து 9 – வது நாளாக குற்றால அருவிகளில் குளிப்பதற்கு தடை!
வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தொடர்ந்து 9 – வது நாளாக குற்றால அருவிகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில், தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்திருக்கிறது.
இதன் காரணமாக, திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள பிரதான அருவி, ஐந்தருவி உட்பட அனைத்து அருவிகளிலும், பேரிரைச்சலுடன் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது.
இதன் காரணமாக, குற்றால அருவிகளில் குளிப்பதற்கு, காவல்துறையினர் தடை விதித்திருக்கின்றனர். நீராட வந்த சுற்றுலா பயணிகள், குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடையால், ஏமாற்றத்துடன் ஊர் திரும்பினர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.