வெள்ளத்தால் உடைந்த சாலை…….மக்களே சீரமைப்பு….!!!
காட்டாற்று வெள்ளத்தால் உடைந்த சாலையை மக்களே சரிசெய்த நிகழ்வு நடந்துள்ளது.
சத்தியமங்கலம் வனப்பகுதியில் தொடரும் கனமழை காரணமாக, காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இந்நிலையில் அரிகியம், மாக்கம்பாளையம், கோம்பைதொட்டி உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு செல்லும் சாலை வெள்ளத்தில் பெருத்த சேதம் அடைந்தது.
இந்நிலையில் மலைகிராமங்களுக்கு கனமழை காரணமாக போக்குவரத்து சேவை துண்டிக்கப்பட்டது.அங்கு உடனடியாக ஒன்று திரண்ட மலை கிராம மக்கள் , காட்டாற்று வெள்ளத்தில் சேதம் அடைந்த அந்த சாலைகளை சீரமைத்தனர்.
இதனை தொடர்ந்து, மலைகிராமங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன.அரசின் உதவியை எதிர்பார்க்காமல் மக்களே களத்தில் இறங்கி சரிசெய்த நிகழ்வு சிறப்பு வாய்ந்தது.
DINASUVADU