வெளியானது எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் விடுதலை செய்யப்படவுள்ள 67 ஆயுள் கைதிகள் பட்டியல்..!
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக ஆளும் அதிமுக அரசு பல்வேறு நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள் என ஏற்பாடு செய்து மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் புகழ்பாடின.
இதற்கிடையே, எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, 25.02.18 அன்று 10 ஆண்டுகள் நிறைவு செய்த ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்படவுள்ள 67 ஆயுள் தண்டனை கைதிகளின் பெயர் பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. நன்னடத்தை குழு பரிந்துரையின்படி கைதிகள் 67 பேரை விடுவிக்கவுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.