வெளிநாட்டு வேலைக்கு ஆசைப்பட்டு பணத்தை பறிகொடுத்த இளைஞர்கள்
வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்று நிறைய சம்பாதித்து நம் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என பல இளைஞர்கள் தங்கள் சொந்தங்களை மறந்து அங்கே தங்கி கஷ்டபட்டு வேலைக்கு செல்ல தயாராகி கடன் வாங்கி பணத்திற்கு ஏற்பாடு செய்கின்றனர்.
ஆனால் சில பொய் வேலைவாய்ப்பு நிறுவனங்களால் பல இளைஞர்கள் தங்கள் பணத்தையும், நிம்மதியையும் இழந்து தவிக்கின்றனர். அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது புதுகோட்டையில் அரங்கேறியுள்ளது.
புதுகோட்டையில் ஒரு தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் பல இளைஞர்களுக்கு கத்தாரில் வேலை வாங்கி தருவதாகவும் அதற்க்கு 18,000 ரூபாய் சர்விஸ் சார்ஜ் எனவும் கூறியுள்ளது. 6 மாத கால வேலை மாத சம்பளம் ரூ.30 – ரூ.40 ஆயிரம் எனவும் கூறியுள்ளனர். இதனை நம்பி பல இளைஞர்கள் அட்வான்சாக ரூ.3000 முதல் 5000 வரை கட்டியுள்ளனர். பிறகு பணம் கட்டிய நாளிலிருந்து 25 நாளில் விசா டிக்கெட் ஆகியவை வந்து விடுமென கூறினர்.
அவர்கள் பணம் கட்டி சுமார் 35 நாட்களாகியும் இன்னும் விசா, டிக்கெட் ஆகியவை இன்னும் கிடைக்கததால் பணம் கட்டிய இளைஞர்கள் அனைவரும் நிறுவனத்தை தொடர்புகொண்டபோது அவர்கள் விசா வந்துவிட்டதாக கூறி அனைவரையும் வர வைத்து, இன்னொரு வேலை இருப்பதாகவும் அது 11 மாத வேலை எனவும், அதற்க்கும் இதே சம்பளம் எனவும், அதற்க்காக் சர்விஸ் சார்ஜ் 48,000 ரூ கட்டவேண்டும் எனவும் கூறியுள்ளது. இதற்க்கு ஒத்துகொள்ளாத இளைஞர்கள் தங்கள் கட்டிய பணத்தையும், பாஸ்போர்ட்டையும் கேட்டுள்ளனர். இதில் பாஸ்போர்ட்டை கொடுத்த நிறுவனம் பணம் தர இழுத்தடிக்கிறது.
அதனால் இளைஞர்கள் அனைவரும் புதுகோட்டை காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர்.
source : dinasuvadu.com