வெளிநாடுகளிலும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் நியமனம்…!
வெளிநாடுகளில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் களத்தில் குதித்துள்ளது அனைவரும் அறிந்ததே. தனது ரசிகர்கள் மாவட்ட வாரியாக நிர்வாகிகளை தேர்ந்துடக்கும் பணி நடந்துவருகிறது.
அதேபோல் அதனை ஒழுங்கு படுத்தும் விதமாக சில கட்டளைகளை மன்ற நிர்வாகத்திடம் அறிவித்தார்.
அது என்ன வென்றால், 35 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் மட்டுமே இளைஞர் அணியில் சேர முடியம். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே நிர்வாக பதவி, சாதி மத இயக்கங்களில் உள்ளவர்கள் மன்றத்தில் சேர தேவை இல்லை. மன்ற கொடியை எப்போதும் வாகனத்தில் பறக்க விட கூடாது. மன்ற நிகழ்சிகளின் போது மட்டும் பயன்படுத்தினால் போதும்.
18 வயதிற்க்கு மேல் யார் வேண்டுமானாலும் மன்றத்தில் சேரலாம். தலைமையகத்தின் அனுமதியின்றி யாரும் பொதுமக்களிடம் வசூல் செய்யகூடாது, தனி ஒருவர் மீது விமர்சனங்கள் வைக்கக்கூடாது. தனிபட்ட கருத்துக்களை மன்றம் சார்பாக கூறக்கூடாது.உள்ளிட்ட பல்வேறு கட்டளைகள் வெளியிட்டார்.
இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், ஷார்ஜா மற்றும் அஜ்மான் பகுதிகளுக்கு ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.