வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம்!
சென்னை வானிலை ஆய்வு மையம்,தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
உள் கர்நாடகாவில் இருந்து லட்சத்தீவுகள் வரை வளிமண்டலத்தின் மேல் அடுக்கில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதாலும், வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலில் ஏற்பட்டுள்ள தொலைதூர சலனங்களால் கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கடல் அலைகளின் சீற்றம் சற்று குறையும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. சென்னையில் அதிகப்பட்சமாக 37 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 28 டிகிரி செல்சியசும் வெப்பம் பதிவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.