வெப்பச்சலனத்தால் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு!சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை வானிலை ஆய்வு மையம் ,பலத்த காற்றுக்கான வாய்ப்பை அடுத்து தமிழகம் மற்றும் புதுவை மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்கு செல்லுமாறு எச்சரித்துள்ளது. தென்மேற்கு திசையில் இருந்து பலத்த காற்று வீசும் என்றும் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை 3 புள்ளி 5 மீட்டர் முதல் 4 புள்ளி 2 மீட்டர் வரையான உயரத்துக்கு கடல் அலைகள் எழும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம், புதுவையில் வெப்பச்சலனத்தால் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், மாலை அல்லது இரவில் இடியுடன் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வால்பாறை,தேவாலா மற்றும் சின்னக்கல்லாரில் தலா 4 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.