வேட்டுக்கு வேட்டு வைத்த சட்டம்………புத்தாடைக்கும் வேட்டு வைக்கும் ஹேச்.ராஜா….!!!

Default Image

எதிர்காலங்களில் தீபாவளிக்கு புத்தாடை உடுத்த கூட தடை வந்து விடும் போல என்று பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார்.
Image result for supreme court delhi firecracker
நாடு முழுவதும் பட்டாசுக்குத் தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், பட்டாசுகளைத் தயாரிக்க, விற்பனை செய்ய, வெடிக்கத் தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எனினும் இதுதொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகளை உச்ச நீதிமன்றம் விதித்தது.மேலும் ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனை செய்ய விதிக்கப்பட்ட தடை தொடரும் என்றும் இதனை பின்பற்றாத நிறுவனங்கள் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை பாயும் என்ற எச்சரிக்கையும் விடுத்தது.
Image result for supreme court delhi firecracker
இந்நிலையில் ராஜபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஹெச்.ராஜா,ஆன்லைன் பட்டாசு தடைவித்தது வரவேற்கத்தக்கது.ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்த அவர் வருங்காலங்களில் தீபாவளிக்கு புத்தாடை உடுத்த கூட தடை வந்து விடும் போல என்று விமர்சித்து பேசினார்.
Related image
தீபாவளி அன்று இரவு 8:00 மணி முதல் இரவு 10:00 மணிவரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்