மதுரையில் திமுக மற்றும் அமமுக கட்சியில் இருந்து விலகிய 500 மேற்பட்டவர்கள் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மீண்டும் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதேபோல மதுரை மேலூரில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் உள்ளாட்சி தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜன் செல்லப்பா செல்வம் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ , “வெற்றி என்பது உங்கள் கை மேல் இருக்கிறது. அதை சாப்பிட வேண்டிய பொறுப்பு உங்களிடம் உள்ளது. மேலும் வாக்காளர்களிடம் சென்று எனக்கு ஒட்டு போடுங்க , ஆளுங்கட்சி நாங்க , கூச்சப்படாமல் வாக்காளர்களின் காலில் விழுந்து ஓட்டு சேகரிக்க வேண்டும்” என அதிமுகவினருக்கு அறிவுரை கூறினார்.
சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சி சார்பில், தவெக ஐடி விங் நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.…
பெங்களூர் : நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
சென்னை : தமிழ்நாட்டில் அடுத்தாண்டு (2026) இதே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் க்ளோபரங்கள் , பரபரப்புகள் என தமிழக அரசியல்…
டெல்லி : இன்றயை காலத்தில் யுபிஐ (UPI - Unified Payments Interface) பரிவர்த்தனை என்பது அதிகரித்துள்ள நிலையில், தொடர்ச்சியாக இதனை…
சென்னை : தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக வலம் வரும் நடிகர் பாபி சிம்ஹாவின் கார் இன்று விபத்துக்குள்ளாகி கார்…
சென்னை : துரை வைகோ, அவரது தந்தை வைகோ நிறுவித்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் கட்சியின் முதன்மை செயலாளர்…