வெடித்தது குட்கா ஊழல் …!அலறவிடும் சிபிஐ ரெய்டு…! அதிமுக-பாஜக கூட்டணியா …!திமுக -பாஜக கூட்டணியா….!
குட்கா ஊழல் தொடர்பாக திமுகவின் டிகேஎஸ் இளங்கோவன் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
குட்கா ஊழல் தொடர்பாக தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி 35 இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்றது. அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி ராஜேந்திரன் மற்றும் முன்னாள் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோரின் வீடுகளில் இந்தச் சோதனை நடந்தது.இது தமிழகளவில் ஒரு அதிர்வலையை உண்டாக்கியது.சோதனைக்கு பின்பு இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் 5 பேரும் வருகிற 20-ந்தேதி வரையில் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
பின்னர் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை இது தொடர்பாக கூறுகையில், உச்சநீதிமன்ற உத்தரவுக்கு இணங்க சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர். இதில் உண்மை வெளிவரட்டும். அதன்பிறகு குற்றம் இருந்தால் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். விசாரணை நடக்கும் போதே ராஜினாமா செய்ய வேண்டும் என்பது தேவை அற்றது. 5 அதிகாரிகளை கைதுசெய்து இருப்பது சிறைக்காவலில் விசாரணை நடத்துவதற்காகத்தான். அவர்கள் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டு அழைத்து செல்லப்படவில்லை.
மேலும் அழகிரி பேரணி நடத்திய தினத்தில், குட்கா விவகாரத்தில் சிபிஐ சோதனை நடத்தியது ஏன்? என்றும் திமுகவுக்கும், பாஜகவுக்கும் இடையே ரகசிய உறவு உள்ளதாகவும் பகிரங்கமாக கூறியுள்ளார். மேலும் சிபிஐ சோதனைக்கு காரணம் திமுக, பாஜகவுக்கு இடையே உள்ள நெருங்கிய தொடர்பு என்றும் கூறினார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக திமுகவின் டிகேஎஸ் இளங்கோவன் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், அதிமுகவும் பாஜகவும்தான் நெருக்கமாக உள்ளது.ஆனால் பாஜகவுடன் திமுக உறவில் இருப்பதாக தம்பிதுரை சொல்கிறார் என்று டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.