காசிவிசுவநாத சுவாமி கோவிலில் தேரோட்டம் வெகுசிறப்பாக நடைபெற்றது. தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் மத்தியில் மிதந்து வந்த தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் புகழ்பெற்ற காசிவிசுவநாத சுவாமி சமேத உலகம்மன் கோவில் அமைந்துள்ளது.இக்கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவின் 9-ம் நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது.காலை 8.30 மணிக்கு உலகம்மன் தேருக்கு எழுந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினர்.இந்நிலையில் காலை 9.15 மணிக்கு தேரை வடம் பிடித்து இழுத்து செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.
தேரோட்டத்தை தொடர்ந்து திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர்.இந்த தேரானது 4 ரத வீதிகளிலும் மேள தாளம் முழங்க வலம் வந்தது 9.50 மணிக்கு நிலையத்தை அடைந்த தேரை கண்டு பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பினர்.
DINASUVADU