விதிகளை காற்றில் பறக்க விட்ட நெடுஞ்சாலைத்துறை..!!
ஒரு மரம் வெட்டினால் 4 மரக்கன்றுகள் நடப்பட வேண்டும் என்ற விதியை தேசிய நெடுஞ்சாலைத்துறை முறையாக பின்பற்றவில்லை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. மதுரை – நத்தம் தேசிய நெடுஞ்சாலைப் பணிகளுக்காக பழமை யான மரங்கள் வெட்டப்படுவதற்கு எதிரான வழக்கில் மரங்களை மாற்று இடங்களில் நடவு செய்ய பல்வேறு தொழில் நுட்பங்கள் வந்துள்ள நிலையில் மரங்களை வெட்டுவதால் சுற்றுச்சூழல் பாதிப்படைவதாகக் கூறப்பட்டுள்ளது. இன்றைய விசாரணையின் போது மரங்களை வெட்ட இடைக்காலத் தடை விதிக்க மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது.
அப்போது தேசிய நெடுஞ்சாலைகளில் 4 வழிச்சாலைக்காக எண்ணற்ற மரங்கள் வெட்டப்பட்டதாகவும், ஆனால் ஒரு மரம் வெட்டினால் 4 மரக்கன்றுகள் நடப்பட வேண்டும் என்ற விதி முறையாக பின்பற்றப்படவில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். ஒப்பந்தப்படி குறிப்பிட்ட மரங்களை மட்டும் தான் வெட்டுவோம் என தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்று கூறிய நீதிபதிகள் விசாரணையை வரும் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
DINASUVADU