வீட்டு வாடகை தொடர்பான பிரச்சனையில் சென்னையில் மூதாட்டியை வீட்டினுள் வைத்து பூட்டிச் சென்ற உரிமையாளர்
வீட்டு வாடகை தொடர்பான பிரச்சனையில் சென்னையில் மூதாட்டியை வீட்டினுள் வைத்து உரிமையாளர் பூட்டிச் சென்றதாக புகார் கூறப்பட்டுள்ளது.
சென்னை காசிமேடு, காசிமாநகரத்தைச் சேர்ந்த ரங்கநாதன் என்பவரின் வீட்டில், பாப்பாத்தி என்ற 65 வயது மூதாட்டி வசிக்கிறார். வாடகை கொடுப்பது தொடர்பாக ரங்கநாதனுக்கும் பாப்பாத்திக்கும் தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே காலையில் வழக்கம் போல முதல் மாடியிலிருக்கும் தனது வீட்டிலிருந்து இறங்கி வந்த பாப்பாத்தி கதவு வெளிப்பக்கமாக பூட்டியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதனையடுத்து தனது உறவினரான விஜயா என்பவருக்கு போன் செய்து உதவுமாறு கேட்டுள்ளார். இது தொடர்பான தகவலின் பேரில் அங்கு சென்ற காசிமேடு போலீஸார், வீட்டின் பூட்டை உடைத்து மூதாட்டி பாப்பாத்தியை மீட்டனர். வீட்டின் உரிமையாளர் ரங்கநாதன் வெளியூர் சென்றுவிட்டதால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.