”வீட்டிலும் , நாட்டிலும் இருக்கும் வில்லன்களை நாங்கள் சமாளிப்போம்” அமைச்சர் சொல்கிறார்..
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இன்று தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் எங்கள் மீது வீண் பழிசுமத்தி அம்புகளை ஏறிகின்றனர், அரசியல் வில்லன்களிடம் நாங்கள் எச்சரிக்கையாக இருப்போம் என்றார்…
விருதுநகர் மாவட்டத்தில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் கூறியதாவது ,
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சீக்கியுள்ள ஊழல் புகார் குறித்தும், வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை குறித்தும் கேள்வி கேட்டபோது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மிகவும் துணிச்சலானவர். அவரைச் சோர்வடையச் செய்வதற்காக இதுபோன்ற பொய்யான வைத்தான் ஆதாரமற்ற குற்றசாட்டுக்களை முன் வைத்து அம்புகளை வீசுகிறார்கள்.
அமைச்சர் விஜய பாஸ்கர் முதல்வர், துணை முதல்வரின் அறிவுரை பெற்று, இந்தப் பொய்யான புகாரை சட்ட ரீதியாக அவர் எதிர்கொண்டு வெற்றி பெறுவார் என்று அமைச்சர் பதிலளித்தார்.
மேலும் அவர் கூறும் போது ,
அதிமுகவுக்கு உண்மையான எதிரி திமுகவும், உதிரியாக எங்களிடமிருந்து பிரிந்து சென்றிருக்கக்கூடிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் தான் என்ற அவர் இவர்களை தவிர அதிமுகவை எதிர்பதற்கு யாருக்கும் தூணிச்சல் இல்லை என்றார்.தொடர்ந்து பேசிய அவர் தினகரன் மீது ஆதாரம் இல்லாமல் துணை முதல்வர் ஓபிஎஸ் எதையும் சொல்லியிருக்க மாட்டார் என்று கூறினார்.
இறுதியாக கூறிய அவர் நாட்டில் இருக்கக்கூடிய வில்லனையும், வீட்டில் இருக்கக்கூடிய வில்லனையும் அதிமுக தொண்டர்கள் எச்சரிக்கையாக அணுகுவார்கள்.அவர்களை வீழ்த்தி தொடர்ந்து அதிமுக வெற்றிக்கு தொண்டர்கள் பாடுபட வேண்டும் என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்…
DINASUVADU