வீட்டின் மதில் சுவர் இடிந்து விழுந்து சென்னையில் இரு குழந்தைகள் உயிரிழப்பு!
மதில் சுவர் சென்னையில் இடிந்து விபத்துக்குள்ளானதில் இரு குழந்தைகள் உடல் நசுங்கி உயிரிழந்தனர். அமைந்தகரை கக்கன் நகர் பகுதியில் சகோதரர்களான அன்சார் மற்றும் பைரோஸ் ஆகியோரின் குழந்தைகள் 4 வயது சிறுமி முஸ்கான் மற்றும் 8 வயது சிறுவன் தயான். .
இவர்கள் வீட்டின் முன்பாக மரம் ஒன்று வளர்ந்திருந்த நிலையில் வேர் துளைத்து மதில்சுவர் பலவீனமடைந்த நிலையில் இருந்தது. இதனை கவனிக்காமல் விட்ட நிலையில், மழை காரணமாக சுவர் மேலும் விரிசலடைந்தது.
இந்நிலையில் மாலை 6 மணியளவில் சுவர் இடிந்து விழுந்ததில் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த முஸ்கானும், தயானும் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். சிறுமி முஸ்கான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், தயான் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தான். இந்த சம்பவம் தொடர்பாக அமைந்தகரை கே-3 காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.