விஸ்வரூபம்-2 படத்திற்கு தடை…!ரூ.5.44 கோடி வேண்டும் …!
பிரமீட் சாய் மீரா நிறுவனம் கமல்ஹாசனின் விஸ்வரூபம்-2 படத்திற்கு தடை கோரிஉயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி விஸ்வரூபம்-2 வெளியாக இருக்கிறது.
இந்த படத்தில் கமல் ஹாசனுடன் ஆன்ட்ரியா, ராகுல் போஸ், பூஜாகுமார், சேகர்கபூர், வகீலா ரகுமான், ஜெய்தீப் அலவாட், ரசல் கோபெஃர்ரி பேங்ஸ், தீபக் ஜேதி, மிர் சர்வார், ஆனந்த் மகாதேவன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இந்நிலையில் பிரமீட் சாய் மீரா நிறுவனம் கமல்ஹாசனின் விஸ்வரூபம்-2 படத்திற்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் மர்மயோகி படத்திற்கு கொடுத்த சம்பளம் ரூ.4 கோடியை வட்டியுடன் சேர்த்து ரூ.5.44 கோடியை கொடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த படத்தின் முதல் பாகத்திற்கும் பல்வேறு பிரச்சினைகள் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.