விஸ்வரூபம்-2 படத்திற்கு தடை …!கமல்ஹாசனுக்கு நோட்டீஸ் …!6ஆம் தேதி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு !
விஸ்வரூபம்-2 படத்திற்கு தடை கோரும் வழக்கில் நடிகர் கமல்ஹாசனுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது .
வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி விஸ்வரூபம்-2 வெளியாக இருக்கிறது.இந்த படத்தில் கமல் ஹாசனுடன் ஆன்ட்ரியா, ராகுல் போஸ், பூஜாகுமார், சேகர்கபூர், வகீலா ரகுமான், ஜெய்தீப் அலவாட், ரசல் கோபெஃர்ரி பேங்ஸ், தீபக் ஜேதி, மிர் சர்வார், ஆனந்த் மகாதேவன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று பிரமீட் சாய் மீரா நிறுவனம் கமல்ஹாசனின் விஸ்வரூபம்-2 படத்திற்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மேலும் மர்மயோகி படத்திற்கு கொடுத்த சம்பளம் ரூ.4 கோடியை வட்டியுடன் சேர்த்து ரூ.5.44 கோடியை கொடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டது.
இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.இதை விசாரித்த நீதிபதிகள், நடிகர் கமல்ஹாசனுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவு பிறப்பித்தனர்.மேலும் வழக்கில் கமல்ஹாசன், தயாரிப்பு நிறுவனம் வரும் 6ஆம் தேதி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த படத்தின் முதல் பாகத்திற்கும் பல்வேறு பிரச்சினைகள் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.