விவசாயிகள் டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்க கோரிக்கை!
விவசாயிகள்,மேட்டூர் அணை திறக்கப்படாததால் டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை ஜுன் 12 ஆம் தேதி திறப்பது வழக்கம். ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக மேட்டூர் அணை உரிய காலத்தில் திறக்கப்படாததால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி மேற்கொள்ள முடியவில்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்து, விவசாயிகளுக்கு இழப்பீடை வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.