விவசாயிகளுக்கு, வேளாண்துறை சார்பில் அறிவுறுத்தல்…!!
தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் தற்போதைய நிதி ஆண்டில் 16.49 லட்சம் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துள்ளதாக வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் காப்பீடு செய்து வருகின்றனர். தற்போது, சிறுதானிய பயிர்களுக்கு வரும் ஜனவரி 15-ம் தேதிவரை பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் உள்ளதால் அனைத்து விவசாயிகளும் சிறுதானிய பயிர்களுக்கான காப்பீட்டினை விரைந்து மேற்கொள்ளுமாறு வேளாண்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 16.49 லட்சம் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த 2016-17 நிதி ஆண்டில் நாட்டிலேயே அதிகளவாக 3 ஆயிரத்து 526 கோடி ரூபாய் காப்பீட்டு நிதி பெற்று தந்துள்ளதாகவும் வேளாண்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.