விவசாயிகளுக்கு மகிழ்ச்சி..உரங்களை அதிக விலைக்கு விற்றால் உரிமையாளர் உரிமம் ரத்து..!!
உரங்களை அதிக விலைக்கு விற்றால் உர உரிமம் ரத்து செய்யப்படும் என வேளாண்மை இணை இயக்குநர் எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக, நாமக்கல் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ஜெ.சேகர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்ட உர விற்பனையாளர்கள் இருப்பு வைத்திருக்கும் உர மூட்டைகளை உரிய விலைக்கு விற்க வேண்டும். அதிகபட்ச விலைக்கு மிகாமல் விற்பனை செய்ய வேண்டும். கடைகளில் விற்பனை செய்யப்படும் உர மூட்டைகளில் அச்சிடப்பட்ட விற்பனை விலையை மார்க்கர் அல்லது பென்சில் மூலமாக திருத்தம் செய்யக்கூடாது. ஏற்கனவே கொள்முதல்செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் உர மூட்டைகளில் அச்சிடப்பட்டுள்ள அதிகபட்ச சில்லறை விலைக்குள் விற்பனை செய்ய வேண்டும்.
உரக்கட்டுபாடு சட்ட விதிமுறைகளை மீறி விற்பனைசெய்தால் உரக்கட்டுபாடு ஆணை 1985 சட்ட விதிகளின் படிகடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை உர விற்பனையாளர்கள் அறிய வேண்டும். மேலும், விவசாயிகள் ஆதார் அட்டை நகலுடன் சென்று மின்னணு கருவிகள் (GS Macbe) மூலம் வழங்கப்படும் பட்டியலில் உள்ள விலையை மட்டுமே செலுத்தி உரத்தை வாங்க வேண்டும். உரம் விற்பனையில் புகார் இருந்தால் வேளாண்மை இணைஇயக்குநர் அலுவலகத்தை (04286280465) தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இவ்வாறு வேளாண்மை இணை இயக்குர் தெரிவித்துள்ளார்